05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம் 

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார். 
05.09.1997 : அன்னை தெரசா நினவு தினம் 
Published on
Updated on
1 min read

அன்னை தெரசா ஐரோப்பிய நாடான மாசிடோனியாவின் தலைநகர் கோபிஜேவில் 26.08.1910 அன்று பிறந்தார். அவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா  போஜாக்சிஹு.  இந்த பெயருக்கு அல்பேனிய மொழியில் 'சிறு மலர்' என்று அர்த்தமாகும்.
இறை பக்தியுடன் திகழ்ந்த அவர், 06.01.1929 அன்று கத்தோலிக்க மதச் சேவைக்காக இந்தியா வந்தார். கொல்கத்தா நகரில் உள்ள ஏழைகளுக்கு பல்வேறு சேவைகள் புரிந்த அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது.
உலக மக்கள் மனங்களில் நீக்கமற  நிறைந்திருக்கும் அன்பின் திருவுருவான அன்னை தெரசா கடந்த 1997-ஆம் ஆண்டு கொல்கத்தா நகரில் காலமானார்.
நேற்று அவர் வாடிக்கனில் உள்ள உலக கத்தோலிக்க மத குருவான, போப் பிரான்சிஸ் மூலம் 'புனிதர்'  என்று அதிகாரபூர்வமாக பிரகடனம் செய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com